மத்திய பிரதேசத்தில் கோவில் பொருட்களை திருடிய நபர் மன்னிப்பு கடிதத்துடன் அந்த பொருட்களை திருப்பி ஒப்படைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பாலக்காட் மாவட்டத்தில் ஷாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து பத்து வெள்ளி அலங்காரப் பொருட்கள் மற்றும் மூன்று பித்தளை பொருட்கள் போன்றவை திருட்டுப் போய் உள்ளது. இது பற்றி லம்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விலை மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் தபார் தலைமையிலான போலீசர்களும் தேடி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லம்தா பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சிறிய குழி ஒன்றில் பை ஒன்று கிடந்துள்ளது இந்த நிலையில் இதனை ஜெயின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து அவர்கள் போலீசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பையில் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் திருடன் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதம் ஒன்று கிடைத்திருக்கின்றது. அதில் என்னை மன்னித்து விடுங்கள் நான் தவறு செய்து விட்டேன் இந்த திருட்டு சம்பவத்திற்கு பின் நான் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டேன் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கடிதம் அடங்கிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் திருடனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.