Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்தியாவுக்கு முதல் தோல்வி.! 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவெற்றி…. புள்ளிபட்டியலில் முதலிடம்.!!

தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான ராகுல் 9, ரோகித் சர்மா 15, விராட் கோலி 12 என அனைவரும் லுங்கி இங்கிடி வேகத்தில் ஆட்டம் இழந்தனர். மேலும் வந்த  வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இருப்பினும் சூர்யகுமார் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) 68 ரன்கள் எடுத்ததன் காரணமாக 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்து இந்திய அணி. தென் ஆப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளும், பார்னெல் 3 விக்கெட்டுகளும் நார்ட்ஜே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


இதை எடுத்து தென்னாபிரிக்க அணியின் துவக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் விசிய முதல் ஓவரில் தென்னாப்பிரிக்காவிற்கு 3 ரன்கள் எடுத்தது.  அதன் பின் அர்ஷ்தீப் சிங் வீசிய 2ஆவது ஓவரில் டி காக் 1 மற்றும் ரீலி ரூஸோவ் 0 என அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதனைத் தொடர்ந்து முகமது ஷமி 6ஆவது ஓவரில் பவுமா 10 ரன்னில் நடையை கட்டினார். தென்னாபிரிக்க அணி 5.4 ஓவரில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது..

அப்போது எய்டன் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் கைகோர்த்தனர். இவர்கள் பொறுமையாக தட்டி தட்டி ரன்களை எடுத்து விக்கெட்டுகளை விடாமல் ஆடி வந்தனர். அதன்பின் அஷ்வின் வீசிய 12 வது ஓவரில் மார்க்ரகம் கொடுத்த கேட்சை கோலி கோட்டை விட்டார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து விட்டது.. அதனைத் தொடர்ந்து அஸ்வின் வீசிய 14 வது ஓவரில் மில்லர் ஒரு சிக்ஸர் மார்க்ரம் ஒரு சிக்சர் என அடிக்க அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. அதன்பின் மார்க்ரம் அரைசதம் அடித்தார்.. 15ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் காயத்தால் வெளியேற உள்ளே வந்தார் பண்ட்.

இதையடுத்து 16வது ஓவரில் மார்க்ரம் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின் ஸ்டப்ஸ் உள்ளே வந்தார்.. கடைசி 18 பந்தில் 25 ரன்கள் தேவைப்பட்டது. அஷ்வின் வீசிய 18ஆவது ஓவரில் முதல் மற்றும் 2ஆவது பந்தில் மில்லர் தொடர்ந்து 2 சிக்ஸர் பறக்க விட்டு ஆட்டத்தை அப்படியே தென்னாப்பிரிக்கா பக்கம் திருப்பினார். ஆனாலும் அதே ஓவரில் ஸ்டப்ஸ்6 எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆனார். அஸ்வின் அந்த ஓவரில் 13 ரன்கள் கொடுத்தார்.

கடைசி ரெண்டு ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டபோது 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் மில்லர் பவுண்டரி எடுத்து அரசரதம் அடித்தார் இருப்பினும் அதற்கடுத்த பந்துகளில் கட்டுப்படுத்திய ஷமி மொத்தமாக அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டபோது, புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட பார்னெல் ரன் எடுக்கவில்லை.

இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்து மில்லரிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். மூன்றாவது பந்தில் பவுன்ஸ் வீச பேட்டில் பட்டு ரிசப் பண்ட் தலைக்கு மேல் சென்றது. பின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டபோது பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் மில்லர்.. மில்லர் 46 பந்துகளில் 59 ரன்களுடனும் பார்னெல் 2 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். தென்னாபிரிக்கா அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங்  2 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கையா அணி 5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு சென்றது. இந்தியா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |