மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் அபிமனி (21). இவர் கடந்த மே மாதம் பத்தாம் தேதி அதிகாலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் நடந்து சென்ற போது அருந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு தமிழக மின்சார துறை சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மின்விபத்தில் உயிரிழந்த அபிமணியின் தந்தை செல்வகுமாரிடம் ஐந்து லட்சத்திற்கான காசோலையை பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கியுள்ளார். அப்போது மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி, உதவி மின் பாதை பொறியாளர் தங்க ராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.