Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…பணி இலக்கு நிறைவேறும்…பிரச்சனைகளை யாரிடமும் சொல்லாதீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! கடந்தகால பிரச்சனையை பிறரிடம் தயவுசெய்து சொல்லவேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு கொஞ்சம் நிறைவேறலாம். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும், படித்த பாடத்தை எழுதி பார்க்கவும். லக்ஷ்மி தேவியின் வழிபாட்டை இன்று  தொடங்கி பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு. முடிந்தால் இரண்டு நிமிடம் தியானம் இருந்தபின் பாடங்களைப் படியுங்கள்.

படித்த பாடத்தை எழுதி பாருங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல்கள் கொஞ்சம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். அதுமட்டுமில்லை அவர்களுடைய நலனுக்காகவும் இன்று பாடுபடுவீர்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்கு முன் பெரியோரிடம் கொஞ்சம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நல்வழியை கொடுக்கும் அதுபோலவே மற்றவர்களிடம் உரையாடும் பொழுது எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் உரையாடுங்கள் உங்களுடைய உடல் நிலையிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், சரியான உணவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |