பிரபல நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் போலந்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகள் தங்களது பாதுகாப்பு தளவாடங்களை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் துருக்கியில் இருந்து பைரக்டார் டி.பி.2எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க கடந்த மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் மொத்தம் 24 ஆளில்லா விமானங்களையும், அவற்றுக்கான தரைகட்டுப்பாட்டு யூனிட்டுகளையும் 4 தவணைகளில் வாங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதேபோல் முதல் தவணையாக 6 பைரக்டார் டிரோன்கள் போலந்து ராணுவத்திடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலந்து பாதுகாப்புத்துறை கூறியதாவது.
இந்த ஆளில்லா விமானங்களை வாங்கியது குறித்து அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். ஆனால் தற்போது உக்ரைனில் நடப்பதை பார்க்கும்போது நாம் நமது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம் என்பது தெரிகிறது. மேலும் எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம். மேலும் இந்த ஆளில்லா விமானங்கள் விரைவில் உக்ரைன் ராணுவத்தில் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை பெற்ற முதல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடு என்ற பெயரை போலந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.