Categories
அரசியல்

“இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்”…. குஜராத்தில் ஒற்றுமைக்கான சிலை‌…. இதோ சில தகவல்கள்.‌….!!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். சர்தார் வல்லபாய் படேலின் 357 அடி உயர சிலையானது குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரை ஓரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 20,000 சதுர அடியில் எழுப்பப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் சிலை இந்தியாவின் ஒற்றுமைக்கான சிலை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லார்சன் அண்ட் டூப்ரா நிறுவனத்திடம் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கும் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு சர்தார் வல்லபாய் படேலின் சிலை முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமைப்பதற்காக இந்தியா முழுவதும் இருந்து விவசாயிகளிடமிருந்து இரும்பு பொருட்கள் நன்கொடையாக பெறப்பட்டது. இதற்காக சர்தார் வல்லபாய் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட் என்ற அமைப்பு 36 அலுவலர்களை நியமித்தது. ‌

சுமார் 5 லட்சம் விவசாயிகளின் பங்களிப்பு சிலை கட்டப்படுவதில் இருக்கிறது. இதனால்தான் சர்தார் வல்லபாய் படேலின் சிலை ஒற்றுமைக்கான சிலை என்று கருதப்படுகிறது. மேலும் சிலையை அமைப்பதற்காக 2012-13 ஆம் ஆண்டில் 200 கோடியும், 2014-15 ஆம் ஆண்டில் 500 கோடியும் 2014-15 ஆம் ஆண்டில் 2500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது‌ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |