தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு வரிசையில் யோகி பாபுவும் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். இந்நிலையில் நடிகர் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை சிம்பு தேவன் இயக்க, வடிவேலு, மனோரமா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு சிம்புதேவன் முயற்சி செய்தார்.
ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில பல பிரச்சனைகளின் காரணமாக வடிவேலு படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு வடிவேலுவை கதையின் நாயகனாக வைத்து எப்படியாவது படத்தை எடுக்க வேண்டும் என்று பல முயற்சிகள் நடந்த நிலையில் வடிவேலு படத்தில் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிம்புதேவன் இயக்கும் சரித்திர படத்தில் யோகி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் தான் நடிகர் யோகி பாபு நடிக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் நடிகர் யோகி பாபு சரித்திர கதையில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் தற்போதிருந்தே எதிர்பார்ப்பு நிலவுகிறது.