Categories
தேசிய செய்திகள்

400 பேருக்கு என்ன ஆச்சு?….. பலியானோர் குடும்பத்திற்கு ரூ 6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

குஜராத் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சமும், மாநில அரசு சார்பில் 4 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் தற்போது 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த குடிமக்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் ட்விட்டர் பக்கத்தில், மாலை நரேந்திர மோடிகுஜராத் முதல்வரிடம் பேசினார். மோர்பியில் நடந்த விபத்து குறித்து மற்ற அதிகாரிகளிடம் மீட்புப் பணிகளுக்காக குழுக்களை உடனடியாக அனுப்ப  வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். நிலைமையை உன்னிப்பாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நரேந்திர மோடிமோர்பியில் நடந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து 2 லட்சம் ரூபாய். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் மற்றும் மாநில அரசு சார்பில் பலியானோருக்கு 4 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |