Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகு…. 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிப்பு….. அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கொடிய தொற்றினால் உலகம் முழுவதும் 65 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்தியாவில் மட்டும் 5.2 லட்சம் பேர் இறந்தனர். இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு உலகம் முழுவதும் மக்களுக்கு காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையானது 22 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில்,‌ இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு லட்சம் பேரில் 210 பேர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு விட 18 சதவிகிதம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியா 36-வது இடத்தில் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் 28% பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உட்பட 8 நாடுகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |