தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் தொடங்கியுள்ளது.
இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முறைகேடாக வழங்கப்பட்ட பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும், வேறு ஒன்றியத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் அதே பகுதியில் பணி வழங்க வேண்டும், மேலும் தவறு செய்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் போன்றவைகளை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.