Categories
தேசிய செய்திகள்

திடீரென கட்டான கேபிள் பாலம்…. ஆற்றுக்குள் கொத்து கொத்தாக விழுந்த மக்கள்….. குஜராத்தில் பரபரப்பு….!!!!

ஆற்றில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்ஹி பகுதியில் மச்சு என்ற ஆறு  உள்ளது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் கேபிள் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றை கடந்து சொல்வது வழக்கம். அதேபோல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கான மக்கள் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து பாலத்தில் இருந்து ஆற்றில் ஏராளமானோர் விழுந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |