Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஒரு நாள் மட்டும் அனுமதி”…. வன்முறையில் ஈடுபட்ட ரவுடி ராபின்சனுக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் பகுதியில் கடந்த 10 தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசி ரவுடி கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது. மேலும் அந்த ரவுடி கும்பல் சாலையில் நடந்து சென்ற சபீக், நவீன், அபூபக்கர் ஆகியோரையும் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. இது குறித்து வழக்கு பதிந்த பரங்கிமலை காவல்துறையினர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான சஞ்சய், கௌதம் உள்ளிட்ட 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த வன்முறைக்கு மூலையாக செயல்பட்ட ராபின்சன் என்பவரை பரங்கிமலை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்துள்ளனர். இதனால் அவர் கடந்த 15ஆம் தேதி செய்யூர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். இதனை அடுத்து பரங்கிமலை காவல்துறையினர் ராபின்சனை காவலில் எடுத்து விசாரிக்க ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மாஜிஸ்ட்ரேட் வைஷ்ணவி தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுவை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் ராபின்சனை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |