காணாமல் போன மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் நகரமலை அடிவாரம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் 10- ஆம் வகுப்பும், அவரது தம்பியான 13 வயது சிறுவன் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மேற்குறிப்பிட்ட மூன்று பேர் உட்பட 5 சிறுவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில் செல்போன் மூலம் சிறுவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு நாங்கள் இனிமேல் படிக்க மாட்டோம். எங்களை தேட வேண்டாம். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 5 மாணவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.