மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். உங்களுடைய செயல்களில் நியாயம் நிறைந்து காணப்படும் பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். தொழில் வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றத்தைக் கொடுக்கும். கூடுதலாகவே இன்று பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் நண்பர்கள் இன்று ஆதாயமும் பெறுவீர்கள். காரியத்தடை தாமதம் விலகிச்செல்லும் கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இப்பொழுது தேர்வு நடக்கும் காலம் என்பதால் மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. படித்த பாடத்தை கொஞ்சம் எழுதிப்பாருங்கள் ரொம்பவே சிறப்பாகவே இருக்கும். தேர்வில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாகவே இருக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல முன்னேற்றத்தையும் அவர்கள் பெறுவார்கள் அதுமட்டுமில்லை இன்று யாரிடமும் வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுவது ரொம்ப சிறப்பாகவே இருக்கும். மற்றவர்களுடைய வாதங்களை கேட்டு அதன் பிறகு நீங்கள் நியாயத்தை சொல்வதும் நல்லது எதிர்ப்புகள் நீங்கும்.
நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் பண வரவை எதிர் பார்த்ததை விட இன்று ஓரளவு சிறப்பாகவே இருக்கும். மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டுமில்லை தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் லக்ஷ்மி வழிபாடு மேற்கொண்டால் இன்று சிறப்பாகவே இருக்கும். லக்ஷ்மி வழிபாட்டை மேற்கொண்டு தேர்வுக்கு செல்லுங்கள் நல்ல வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்