Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்”…. பணி நியமன ஆணையை வழங்கிய எம்பி கனிமொழி…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 619 பேருக்கு எம்பி கனிமொழி பணி நியமன ஆணையை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர் புற வாழ்வாதார இயக்கமும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இன்ஜினியரிங் கல்லூரியும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று முன்தினம் நடத்தியது. முகாமில் 112 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது.

மேலும் மாணவ-மாணவிகள் 2618 பேர் பங்கேற்றார்கள். இதில் தேர்வு செய்யப்பட்ட 619 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக எம்பி கனிமொழி பங்கேற்றார். பின் 619 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றார்கள்.

Categories

Tech |