விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரத்தின் கடைசி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார். அந்த வாரத்தில் எலிமினேஷன்களும் நடைபெறும். அதன்படி நேற்று அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்றைய BIGG BOSSல் துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் நடிகர் கமல்.
வேற்று கிரகங்களுக்கு ராக்கெட்டை அனுப்ப தெரிந்த நமக்கு, சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் மனிதர்களுக்கு ஒரு மெஷினை செய்து தர முடியாதா என கேள்வி எழுப்பினார். சக மனிதர்களை மதிக்க வேண்டும். கேரளாவில் இதற்கு மிஷின் உள்ளது. ஆனால் இங்கு இல்லை. நான் அரசை குறைகூறவில்லை. ஆனால் பணியாளர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை என்றார்.