இந்தியாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான flipkart நிறுவனம் தற்போது கேஷ் ஆன் டெலிவரிக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.அதனால் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பணம் செலுத்துவோருக்கு தற்போது செலவு அதிகரித்துள்ளது. ஆன்லைனில் கட்டணம் செலுத்துவோருக்கு இந்த கூடுதல் கட்டணம் கிடையாது. Flipkart பிளஸ் பட்டியலில் உள்ள பொருள்களுக்கு 500 ரூபாய்க்கு உட்பட்ட விலை கொண்ட பொருளை வாங்கினால் கேஷ் ஆன் டெலிவரிக்கு 40 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.500 ரூபாய் அல்லது அதற்கு மேல் விளைவு உள்ள பொருட்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
இதுவரை கேஷ் ஆன் டெலிவரி சேவைக்கு flipkart நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருந்த நிலையில் இனி 150 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான விலை கொண்ட பொருள்களுக்கு கேஷ் ஆன் டெலிவரிக்கு ஒவ்வொரு ஆர்டருக்கும் ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.ஆன்லைனில் பணம் செலுத்தினால் இந்த கட்டணம் கிடையாது.பொருட்களை கையாளுவதற்கான செலவுகளுக்காக இந்த கட்டணத்தை flipkart நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.