Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே! இது வேற லெவல்…. சென்னையில் விரைவில் ரோப் கார் சேவை…. எங்கு தெரியுமா….? மேயரின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

சென்னையில் நேற்று மாநகராட்சி சார்பில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பலரும் தங்களுடைய வார்டுகளில் முடங்கி கிடந்த திட்டங்கள் குறித்து கேட்க அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர் செம்மொழி கூட்டத்தில் பேசினார். அவர் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து நேப்பியர் பாலம் வரை ரோப்  கார் வசதியை கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று பேசுங்கள் என்றும் கூறினார்.

இதனையடுத்து மேயர் பிரியா ராஜன் பேசினார். அவர் பேசியதாவது, ரோப் வசதி குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துரைக்கப்படும். இதற்கு முதலில் கடலோர ஒழுங்கு ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். அங்கு ஒப்புதல் கிடைத்த பிறகு மாநில அரசின் ஒப்புதல் வாங்கி மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறினார். இந்நிலையில் தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரோப் கார் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னையின் போக்குவரத்து தரம் மேம்படுவதோடு, சென்னை சிட்டியின் வளர்ச்சி வேற லெவலில் இருக்கும்.

மெரினா கடற்கரையானது மிக முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்கு நாள்தோறும் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகைப் புரியும் நிலையில், விடுமுறை தினங்களில் 50,000 சுற்றுலா பயணிகள் வரை வருகை புரிகின்றனர். ஏற்கனவே மெரினா கடற்கரை பகுதியில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனுடன் ரோப் கார் சேவையும் கொண்டுவரப்பட்டால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் மெட்ரோ ரயில் மற்றும் ரோப் கார் போன்றவைகளால் சென்னை மாநகரம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறும்.

Categories

Tech |