Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாங்க போலீஸ்….. ஹாஸ்டல்க்குள் ரைடு….. 3 செல்போன்கள் திருட்டு….. 3 பேர் கைது….!!

கோவை அருகே போலீஸ் வேடம் அணிந்து மூன்று செல்போன்களை திருடிச் சென்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அத்திப்பாளையம் சாலையில் ஏராளமான தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு வெளியூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறி நான்கு பேர் காவல்துறை சீருடை அணிந்து நேற்று தனியார் விடுதி ஒன்றில் சோதனை செய்துள்ளனர்.

பின் அங்குள்ள செல்போன்களை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியே வந்து வார்டனிடம் நாங்கள் மூன்று செல்போன்களை எடுத்துள்ளோம். இது யாருடையதோ  அவர்களை காவல் நிலையம் வந்து வாங்கிக்க சொல்லுங்க என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். பின் செல்போன் உரிமையாளர்கள் காவல் நிலையம் சென்று விசாரிக்கையில்,

அங்குள்ள காவல் துறையினர் சுற்றுவட்டாரத்தில் உள்ள யாரும் சோதனையில் ஈடுபடவில்லை என்று கூற இரு தரப்பினருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அவர்கள்,

கோவையைச் சேர்ந்த சுகுமார், சுரேஷ் , வினோத், கண்ணன் ஆகிய நான்கு பேரும் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்பதை கண்டறிய தனிப்படை அதிகாரிகளை வைத்து சுரேஷ், சுகுமார் கண்ணன் ஆகிய 3 பேரை  கைது செய்ய தலைமறைவான வினோத்தை வலைவீசி தேடி வருகின்றனர். பின் கைது செய்யப்பட்ட மூவரிடமும் இதற்கு முன்பாக வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட உள்ளீர்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |