Categories
தேசிய செய்திகள்

“பக்ரீத்துக்கு‌ ஆடு”…. தேர்தலுக்கு எம்எல்ஏ…. ஒருத்தருக்கு விலை ரூ. 35 கோடி….. பாஜகவை வெளுத்து வாங்கிய முதல்வர்….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியான நிலையில் பின் அதில் உண்மை இல்லை என்பதை தெரியவந்தது. இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜக கட்சியானது பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளை வாங்குவது போன்று மற்ற கட்சி எம்எல்ஏக்களை  விலைக்கு வாங்குகிறது.

ம.பி, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி தான் ஆட்சியை கவிழ்த்து. ஒரு எம்எல்ஏவுக்கு 35 கோடி ரூபாய் பாஜக கொடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என பாஜக திட்டமிட்டது. ஆனால் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பாஜகவின் கனவு பலிக்கவில்லை. மேலும் இதற்கு உண்டான பலன் வருகிற தேர்தலில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |