கே எல் ராகுலை நீக்கிவிட்டு ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்..
டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது இந்திய அணி. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் சூரியகுமார் யாதவியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்த ஸ்கோரே வந்தது. சூர்யகுமார் 40 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) 68 ரன்கள்எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொடக்க வீரர்கள் செயல்படவில்லை.கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) விராட் கோலி (12) சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இதில் குறிப்பாக கே.எல் ராகுல் தொடர்ந்து 3ஆவது போட்டியில் சொதப்பியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 4, நெதர்லாந்துக்கு எதிராக 9, தென்னாப்பிரிக்க எதிராக 9 என மூன்று போட்டியிலும் சொற்பரன்னில் அவுட் ஆகியுள்ள கே எல் ராகுல் மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அடிப்பார், அந்த போட்டியில் அடிப்பார் என்று ஒவ்வொரு முறையும் இந்திய அணி அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் அவரோ நான் பார்முக்கு வர மாட்டேன், நீ இப்படித்தான் ஆடுவேன் என்பது போல் ஆடிக் கொண்டிருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் அவரை நீக்கிவிட்டு ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்தை எதிர்கொள்ளும்போது தொடக்கத்தில் மிகவும் பயந்து ஆடுவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஐபிஎல் போட்டியில் தான் சிறப்பாக ஆடுவார், சர்வதேச போட்டியில் பயந்து சொதப்புவார் என்று பலவிதமாக அவரை கலாய்த்து வருகின்றனர். எனவே அடுத்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது ரிசப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது..
Choose Your Openers For The Rest Of T20 World Cup
Like For #KLRahul
Retweet For #Rishabpant pic.twitter.com/TnQTSQVIIQ— FaishaL BEAST (@FAISHAL94536228) October 27, 2022
#KLRahul𓃵 pic.twitter.com/iHeUhdEdp8
— memes_hallabol (@memes_hallabol) October 29, 2022
https://twitter.com/brb_memes7/status/1585558204544843776
Oh Rohit out hogayaa ye meme banane me 😜#KLRahul𓃵 #rohit#IndiaVsPak #iQOOGameOfFones #iQOO #INDvPAK #iQOOMegaGiveaway @IqooInd
Tag@bubbletoddler @im_piyushO @luckykarann pic.twitter.com/jcCU5yYvpW— ShivvYadav (@y_shivv) October 23, 2022
This meme for you sir 😁 #justfun pic.twitter.com/NnXABS4KxR
— ஹேரி கௌதம் 🛡️ (@HarryGowtham) October 23, 2022