விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் பாரதிகண்ணம்மாவும் ஒன்று. இந்த சீரியல் பல வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிய போகிறது என்று கூறப்படுகிறது. அதன் கிளைமாக்ஸ் காட்சி தான் தற்போது பரபரப்பான உச்சகட்டத்தில் உள்ளது.
அதன்படி வெண்பாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி உள்ள பாரதி வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டுவாரா? இல்லையா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான பாரதி கண்ணம்மா ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.