இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சனுக்கு பின் பிரதமராக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணான சுவில்லா பிரேவர் மேன் உள்துறை மந்திரி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மந்திரியான பெண் அவர் அளித்த பேட்டி இந்தியா உட்பட சர்வதேச அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில் விசா காலகெடு முடிவடைந்த பின்பும் இங்கிலாந்தில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து மக்கள் என்றும் இங்கிலாந்து எல்லைகளை இந்தியர்களுக்கு திறந்து விடுவதற்காக வாக்களிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இந்தியர்களுக்கு எதிரான அவரது இந்த சர்ச்சை பேச்சிற்கு இந்திய தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது இதனை மத்திய அரசும் எதிர்த்துள்ளது. இந்த சூழலில் பிரேவர் மேன் அப்படியே பல்டி அடித்து இந்தியாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார். இருப்பினும் அவர் ஒரு சில நாட்களில் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனை தொடர்ந்து லிஸ்ட்ரசும் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பிகளின் ஆதரவுடன் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரதமரானவர் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கின்றார். ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி சுவில்லா பிரேவர் மேன் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பதவி விலகிய ஆறு நாட்களுக்குள் சுவில்லா பிரேவர் மேன் மீண்டும் மந்திரியாக இருக்கின்றார்.
டிரஸ்சின் அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பிரேவர் மேன் நான் ஒரு தவறு செய்து விட்டேன் அரசு விதிகளை மீறிவிட்டேன். அதற்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி கடந்த பதினெட்டாம் தேதி மந்திரி பதவியில் இருந்து விலகி உள்ளார். இருப்பினும் பிரதமர் டிரஸ் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் அப்போது தெரிவித்துள்ளார். இந்த சூழலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்பி வெட்கூப்பர் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களின் முக்கிய பொறுப்பிற்கு பிரேவர் மென்னை நியமனம் செய்ததற்காக அரிசியை கடுமையாக சாடியுள்ளார். மேலும் இதுபற்றி ஸ்கை நியூஸ் பத்திரிகை அளித்த பேட்டியில் பேசிய போது பிற பாதுகாப்பு விதிமீறல்களும் பிரேவர் மேன் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது. பாதுகாப்பு விஷயங்களில் விதிகளை மீறும் விதமாக நடந்து கொண்ட ஒருவரை ஆறு நாட்களில் மீண்டும் மந்திரி பதவியில் நியமனம் செய்திருப்பது ரிஷி இன் மிகப்பெரிய தவறு உண்மையில் எடுத்துக்காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார். சுவேலா நியமனம் ஒரு பொறுப்பற்ற தவறான முடிவு என ரிஷி எதிர்க்கட்சி எம்பி சாடி இருக்கின்றனர்.