பாகிஸ்தானில் சோயா நூர்(20) என்ற மாணவி பி.காம் படித்து வருகிறார். இவர் அவரது ஆசிரியரான சாஜித் அலி(52) என்பவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை சோயாநூர் சாஜித் அலியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், வயது வித்தியாசத்தை காரணமாக கூறி மறுத்துள்ளார். நாம் இருவருக்கும் 32 வயது வித்தியாசம் இருக்கிறது நீ நினைப்பது நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்குமாறு யோசித்து முடிவு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சோயா நூரின் காதலை ஏற்ற சாஜித் அலி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.