பத்திரிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு எனும் பெயரில் தாம் யாருக்கும் லஞ்சம் தரவில்லை என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து குறைந்தது ரூபாய் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை வைத்து கிப்ட் பாக்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு தரப்பட்டது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.
அதற்கு, தங்கக்காசு, லேப்டாப், ஐபோன் என காங்கிரஸ் ஆட்சியில்தான் லஞ்சம் தரப்பட்டது என்று பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கிடையில் முதல்வர் பசவராஜ் பொம்மை பத்திரிக்கை ஆசிரியர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் தனக்கு தெரியாமல் முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்தப் பரிசு அனுப்பப்பட்டதாக பசவராஜ் பொம்மை விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.