Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புது BIKE வாங்க ஆசை….. பாட்டியை கொன்ற பேரன் கைது….. சென்னை அருகே பரபரப்பு….!!

சென்னை அருகே புதிய மோட்டார் சைக்கிளுக்கு ஆசை பட்டு பாட்டியை கொன்ற பேரன் காவல்துறை அதிகாரிகளால் கைது  செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 70 வயதாகிறது. இந்நிலையில் இவர் தனது மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.  கடந்த வாரம் சாந்தியும் அவரது மகன் சுரேஷும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். பின் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் வள்ளியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடக்க,

வீட்டில் இருந்த 7 பவுன் நகை மூன்று லட்சம் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்தவகையில் சுரேஷின் தங்கை மஞ்சுளா என்பவரது கணவர் கார்த்திக். இவர் மூதாட்டி இறந்த மூன்று நாட்களுக்குள் விலை உயர்ந்த புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி சொகுசாக ரவுண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

இதனால் காவல் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரிக்கையில், புதிய மோட்டார்சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு இதே தெருவில் உள்ள 17 வயது சிறுவன் உடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட போது பாட்டி பார்த்து விட்டார். அதனால் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தேன் என்பதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த நகை பணம் மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |