தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் இரண்டாம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திர மற்றும் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே சென்னையில் மழை வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்ணை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம்.இந்த எண்களை தொடர்பு கொண்டு மழை வெள்ளம் மற்றும் மரம் விழுந்தது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.