சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் சென்ற 25ம் தேதி பகுதி சூரியகிரகணம் நிகழந்தது. ஒரு கிரகணகாலம் என்பது தோராயமாக 35 நாட்கள் ஆகும். இவற்றில் குறைந்தது 2 கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில் ஒரு கிரகண காலத்தில் 3 கிரகணங்களும் நிகழக்கூடும். இந்த நிலையில் இந்த வருடத்தின் சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கிறது. முழுசந்திர கிரகணம் இந்த வருடத்தின் கடைசி கிரகணம் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதத்தின் 2வது கிரகணம் ஆகும். இதனிடையில் சந்திரன் ஒரு ரத்தநிலவாக இருக்கும்.
இவை முழு சந்திர கிரகணத்தின்போது நிகழ்கிறது. இந்த முழு சந்திரகிரகணத்தை கொல்கத்தா உட்பட நாட்டின் கிழக்கு பகுதிகளில் காணமுடியும். எஞ்சிய பகுதிகளில் பகுதி சந்திரகிரகணத்தை மட்டும் பார்க்க இயலும். இந்திய நேரப்படி பிற்பகல் 2:48 மணிக்கு துவங்கி மாலை 6:19 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடையும். முழுசந்திர கிரகணத்தை பார்க்க உபகரணங்கள் எதுவும் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்காவின் ஏராளமான பகுதிகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகள், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் காணமுடியும். அக்டோபர் 25ம் தேதி ஒருபகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. வருகிற நவம்பர் 8ம் தேதி வரும் முழு சந்திரகிரகணம் இந்த வருடத்தின் கடைசி முழு சந்திரகிரகணம். அடுத்த முழு சந்திரகிரகணம் 2023ம் வருடம் அக்டோபர் 28ம் தேதி காணமுடியும்.