ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 8004 கோடியை இன்று செலுத்தியுள்ளது.
ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் , ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவை தொகையை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி,
கடந்த 17-ந்தேதி ரூ.10 ஆயிரம் கோடியை தொலை தொடர்பு துறைக்கு செலுத்தியது.பாக்கி தொகையை ஏர்டெல் நிறுவனம் மேலும் ரூ.8004 கோடியை இன்று தொலை தொடர்பு துறைக்கு செலுத்தியது. இதனால் நிலுவை தொகையில் ரூ.18,004 கோடியை செலுத்தியுள்ள ஏர்டெல் மார்ச் 17-ந்தேதிக்குள் நிலுவை தொகை முழுவதையும் செலுத்தி விடுவதாக தெரித்துள்ளது.