இந்த ஆண்டு ஐபேட் மாடலுடன் இரண்டு புதிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான டேப்லெட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அடுத்த தலைமுறைக்கான ஐபேட் மாடல்களில் இருந்து புதிய மாற்றத்தை ஆப்பிள் நிறுவனம் செய்ய இருக்கிறது. இதற்கென புதிய கீபோர்டி உருவாக்க பட்டு வருகின்றது. இதில் பில்ட் இன் டிராக்பேட் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இதனை ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடலுடன் அறிமுகம் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பில்ட் இன் டிராக்பேட் கொடுக்கப்படும் பட்சத்தில், ஐபேட் ஒ.எஸ். தளத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம். மவுஸ் பயன்படுத்துவதற்கான வசதியுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ஒ.எஸ். தள பயன்பாடு இருக்கும்.தற்போதுள்ள ஐபேட் ஒ.எஸ். மவுஸ் சப்போர்ட் கொண்டிருந்தாலும் இது அசிஸ்டிவ் டச் தொழில்நுட்பத்தின் நீட்சியாக உள்ளதால் இதனை செயல்படுத்த அக்சஸபிலிட்டி ஆப்ஷன் செல்ல வேண்டும்.
இப்படி செயல்படுத்தினாலும், இது விண்டோஸ் அல்லது மேக் ஒ.எஸ்.இல் உள்ள வழக்கமான மவுஸ் பாயின்ட்டர் போன்று இயங்காது. மேலே கசிந்துள்ள புதிய தகவல்கள் உண்மையாகினால் இதுவரை இல்லாத புதிய அப்டேட்டுடன் வரக்கூடிய புதிய ஐபேட் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.இதனை பயன்படுத்துவது வழக்கமாக இருக்கும் நோட்பேட் மற்றும் டேப்லெட் போன்று இருக்கும். மேலும் புதிய மென்பொருள் அப்டேட் புதிய வகை ஐபேட் சாதனங்களுக்கும் கொடுக்கப்படலாம்.