Categories
மாநில செய்திகள்

ஈசியா படிக்கலாம்…! இனி தமிழில் மருத்துவம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அப்டேட்ஸ்…!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ படிப்பை தேர்வு செய்து படித்து வந்தனர். இதன்பின் 7.5% உள் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழி கல்வி படித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு முதல் வருடத்தில் ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு MBBS பாடப் புத்தகங்களை புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ கல்வியை வட மாநிலங்களில் இந்தியில் கற்றுக்கொடுப்பதை போல் தமிழ்நாட்டில் தமிழில் கற்றுக்கொடுப்பதற்காக மருத்துவ பாடங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும் என்றார்.

Categories

Tech |