Categories
தேசிய செய்திகள்

நாளை (நவ…1) முதல் எல்லாமே மாறப்போகுது…. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்னென்ன?…. இதோ முழு விவரம்….!!!!

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல புதிய விதிமுறைகள் மற்றும் விலை ஏற்றம் இரக்கம் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன.இவை அனைத்தும் சாமானிய மக்களுடன் தொடர்புடைய விதிமுறைகளாக உள்ளன.அதன்படி நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம்.

சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் ஏதாவது திருத்தம் செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் நாளை சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலிண்டர் டெலிவரி:

இனி கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும்போது வாடிக்கையாளரின் மொபைலுக்கு ஓடிபி வரும். அதனை சிலிண்டர் டெலிவரி போது வாடிக்கையாளர்கள் சொல்ல வேண்டும் . அப்போதுதான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.

இன்சூரன்ஸ்:

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு கேஒய்சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி இனி சுகாதார காப்பீடு மற்றும் பொது காப்பீடு பாலிசிகளுக்கு கேஒய்சி கட்டாயம்.

ஜிஎஸ்டி:

நவம்பர் 1 முதல் 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட turnover கொண்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு நான்கு இலக்க HSN code கட்டாயம் தேவை.

ரயில்கள்:

நவம்பர் 1 முதல் நெடுந்தூரம் பயணிக்கும் பல்வேறு ரயில்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களின் பயணத்தை திட்டமிடுவது நல்லது.

Categories

Tech |