இன்றைய காலகட்டத்தில் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். பணத்தை சேமிக்கவும் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும் வங்கி கணக்கு என்பது மிகவும் அவசியம். அதேசமயம் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும்.அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பராமரிப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கதவறினால் அதற்கு அபராதம் செலுத்துவதோடு அந்த கணக்கை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விடுவார்கள். அப்படி சேமிப்பு கணக்குகளை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதனை மூடுவது நல்லது.
ஏனென்றால் செயல்படாமல் இருக்கும் கணக்கில் இருந்து நிதி மோசடி செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்கை மூடுவது நல்லது.இருந்தாலும் வங்கி கணக்கை முழுவதுமாக மூடுவதற்கு வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணத்தையும் எடுப்பதன் மூலமாக உங்களின் பணி அப்படியே முடிந்து விடாது.நீங்கள் சேமிப்பு கடத்தை மூடும் போது பலவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கில் இருக்கும் பாலன்ஸ் குறித்து சரிபார்க்க வேண்டும்.
பேங்க் பேமென்ட் ஐ பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் கடந்த இரண்டு அல்லது மூன்று வருட ஸ்டேட்மெண்ட் பதிவை சரி பார்க்கவும்.எந்த ஒரு பரிவர்த்தனையின் விவரங்களையும் சரி பார்ப்பதற்கு அல்லது எதிர்காலத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இது மிகவும் அவசியம். செயல்படுத்தப்படாத பாக்கிகள் மற்றும் சேவை கட்டணங்களை செலுத்த வேண்டும். ஏதாவது தொகை மீதம் இருந்தால் உங்கள் கணக்கை மூட உங்கள் வங்கி அனுமதிக்காது.
நீங்கள் இஎம்ஐ,பில்கள் மற்றும் மாதாந்திர சந்தாக்களை செலுத்த குறிப்பிட்ட கணக்கை பயன்படுத்தினால் அந்த கணக்கிலிருந்து சேமிப்பு கணக்கிலிருந்து அத்தகைய நிலையான வழிமுறைகள் அல்லது தானாக பணம் எடுக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் .மேலும் சேமிப்பு கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மூடப்பட்டால் பல வங்கிகள் உங்கள் கணக்கை மூடுவதற்கான கட்டணத்தை வசூல் செய்யும்.நீங்கள் கணக்கு தொடங்கிய ஓராண்டு குழு கணக்கு மூடப்பட்டால் வங்கிகள் கட்டணம் வசூலிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவற்றைப் பின்பற்றினால் நீங்கள் வீண் சிரமங்களை தவிர்க்கலாம்.