Categories
தேசிய செய்திகள்

எங்களை பாத்துட்டே ஆட்டோ ஓட்டுறாங்க!…. கடுப்பா இருக்கு!…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

ஆட்டோவிலுள்ள முன்பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவது அசவுகரியத்தை ஏற்படுத்துவதால் அதில் உள்ள முன்பக்க கண்ணாடியை நீக்க உத்தரவிடவேண்டும் என மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகளிடம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு அளித்துள்ளது.

அரசு சார்பற்ற அமைப்பான வாட்ச்டாக் அறக்கட்டளையைச் சேர்ந்த வக்கீல் காட்ப்ரே பிமென்டா அளித்துள்ள கடிதத்தில், ஆட்டோவிலுள்ள முன் பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவதால், இளம்பெண்கள் பல பேரும் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும் போது அசவுகரியமாக உணர்வதாக கூறியுள்ளார்.

அத்துடன் ஆட்டோ டிரைவர்களின் இத்தகைய செயலால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பாக வண்டியை ஓட்ட ஆட்டோவின் பக்கவாட்டு கண்ணாடிகளே போதுமானது என்பதால் அரசு இதை கருத்தில் கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |