மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது பிட்மென்ட் காரணியில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்த வருடம் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. பிட்மென்ட் காரணி மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. பிட்மென் காரணி உயர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டால் அடிப்படை சம்பளம் 26 ஆயிரம் ஆக அதிகரிக்கும். அடுத்த வருடம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதுகுறித்து முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிட்மெண்ட காரணி உயர்த்தப்பட்டால் 52 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும்.