Categories
மாநில செய்திகள்

டிடிவிக்கும் தோணல…. இபிஎஸ்ஸும் செய்யல….. தேவர் ஜெயந்தியில் ஸ்கோர் செய்த ஓபிஎஸ்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. பசும்பொன்னின் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவித்து சிறப்பிப்பது 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. 2014-16 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வங்கி லாக்கரியில் வைத்து பாதுகாக்கப்படும் தங்க கவசத்தை தேவர் ஜெயந்தி நாளில் பெற்று அதனை அவரை சிலைக்கு சாட்சி அறிய வாய்ப்பை பெற்றிருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு 2017 ஆம் ஆண்டு கட்சிக்கு டிடிவி தினகரன் உரிமை கொண்டாடிய போது இந்த வாய்ப்பு ஓபிஎஸின் கையை விட்டு நழுவி மாவட்ட கலெக்டருக்கு போனது. அதேபோன்று நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. இபிஎஸ் ஓபிஎஸ் என்று கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து நிற்க, அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு அனுபிக்கப்படும் தங்க கவசத்திற்கு இபிஎஸ் தரப்பில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும் இன்றைக்கும் கட்சிக்கு நான் தான் பொருளாளர் என ஓபிஎஸ்ஸும் உரிமை கொண்டாடினர். இந்த முறை நீதிமன்றம் வரை போக, ரெண்டு தரப்புக்கும் வேண்டாம் என்று தேவர் தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்டம் வருவாய் அதிகாரி வசம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதனையடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் இப்படி எதிரதிர் துருவங்களாக இருந்தால் நாளைக்கு தேர்தலிலும் இன்று கவச விவகாரத்தில் நிகழ்வது போல அதிமுகவிற்கு ஏமாற்றம் ஏற்படலாம் என்ற ரீதியில் எச்சரிக்கை விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராத விதமாக தேவர்‌ ஜெயந்தி நாளில் சைலன்டாக ஒரு சம்பவத்தை ஓபிஎஸ் செய்து காட்டியுள்ளார். அதாவது, புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவு இடத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு ஒவ்வொரு மாதம் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளி கவச அணிவிக்க வசதியாக 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட கவசத்தை தேவர் நினைவிட காப்பாளர் த. காந்தி மினாளிடம் அளிக்கப்படுகிறது என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதனை தேவர் ஜெயந்தி நாளிலே அவரின் சிலைக்கு அனுபித்து மரியாதை செலுத்தி உள்ளார் ஓபிஎஸ். இது குறித்து அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் ஓபிஎஸ் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் தங்க கவசத்தை தேவர் சிலைக்கு தம்மால் இன்று உரிமையோடு அணிவிக்க முடியாமல் போனாலும், புதிதாக வெள்ளி கவசத்தை அணிவித்ததன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தேவர் ஜெயந்தி நாளில் புது நம்பிக்கையை ஓபிஎஸ் அளித்துள்ளார்.

Categories

Tech |