Categories
மாநில செய்திகள்

“தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி”… மத்திய அரசுக்கு கோரிக்கை… அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்..!!!!!

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்துள்ளார். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதள முகவரி அமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் இந்தியில் மருத்துவம் கற்றுக் கொடுப்பது போன்று தமிழிலும் கற்றுக் கொடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய அவர் தமிழில் மருத்துவம்  பயிற்றுவிக்க பாடத்திட்டம் மொழிபெயர்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலாம் வருடம் பாட புத்தகத்திற்கான மொழிபெயர்ப்பு பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவ முன் அனுமதி கேட்டிருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து மருத்துவ கல்லூரிகள் நிறுவ அனுமதி கிடைத்தவுடன் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |