பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் பரவியது. இந்த தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீன நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயிரத்து 658 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதில் 1,704 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மேலும் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது.