நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்தி 410 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 82 பேர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 63 பேர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர் காவல் படையினர் என அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். இந்நிலையில் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனங்களில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பயணம் செய்தும் போது 2 பேருமே கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். இந்நிலையில் 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், அதில் பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இந்நிலையில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் நேரடியாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி முதல் முறையாக பிடிபட்டால் ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக பிடிபட்டால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தடை செய்து வைக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீப காலமாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. மேலும் பெற்றோர்களின் அனுமதியுடன் சிறுவர்கள் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இதனால் வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் 1 ஆண்டு ரத்து செய்யப்படும். இந்நிலையில் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து மற்றும் சீறார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரட்டும். இதனையடுத்து பொதுமக்கள் தகுதியான தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்தி விட்டு ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது சட்டப்படி குற்றமான செயல்.
இரண்டு நபர்கள் மேல் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அக்டோபர் மாத ஆரம்பத்தில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவித்து இருந்தார். அரசு பொதுப்பணித்துறையினர், பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள செஞ்சி சாலையின் குறுக்கே சேதம் அடைந்த கால்வாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் புதுச்சேரி நோக்கி மகாத்மா காந்தி சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் அஜந்தா சிக்னலில் இருந்து வலது புறமாக திரும்பி அண்ணா சாலையில் சென்று 45 அடி சாலை, வள்ளலார் சாலை, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை வழியாக செல்ல வேண்டும்.
எனவே பொதுமக்கள்,வியாபாரிகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மாநில முழுவதும் நாளை முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அதை மீறி செல்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என கூறியுள்ளனர்.