ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹெரான் பிரிவில் ஜுமாஹூண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சில தீவிரவாதிகள் எல்லை கடந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் மீதி இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோன்று திராச் பகுதியில் 3 தீவிரவாதிகளும், மூலு பகுதியில் ஒரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.