Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்கள் கவனத்திற்கு”…. இனி ஓய்வு பெறும் வயது இதுதான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக முதலில் இருந்தது. கடந்த 2020- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு  ஓய்வு பெறும் வயது  59  ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு  60 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அவர்களின் பனிக்காலத்தை நீடிப்பது கண்டிக்கத்தக்கது என்று  மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும் இந்தியாவில் உள்ள பல  மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 மற்றும் 60 ஆக இருந்து வருகிறது.  தற்போது கேரளா அரசும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ளது. அதாவது கேரள மாநில பொதுத்துறை ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி நிதித்துறை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநில பொதுத்துறையின் கீழ்  பணியாற்றி வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |