Categories
தேசிய செய்திகள்

இதை வச்சி தான் ராமர் பாலம் கட்டினாரா?…. தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் …. வியப்பில் மக்கள்….!!!!

தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேட் பாங்க்  காலனி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கல்லை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சுரேஷின் வீட்டில் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த கல்லை தண்ணீரில் போட்டுள்ளனர். ஆனால் அந்தக் கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்துள்ளது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சுரேஷ் அந்த கல்லை உடனடியாக எடை போட்டு பார்த்துள்ளார். அதில் சுமார் 1  கிலோ 200 கிராம் இருந்துள்ளது. மேலும் அந்த கல் தண்ணீரில் போடும்போது மிதக்கும் சம்பவம் அப்பகுதியில்  வேகமாக பரவியதால் அப்பகுதி மக்கள் அங்கு சென்று அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து சுரேஷ் கூறியதாவது. நான் கடற்கரைக்கு சென்ற போது இந்த கல் கிடைத்தது.

ஆனால் இந்த கல் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கிறது. இதனை பார்க்கும் அக்கம்பக்கத்தினர் அது ராமர் காலத்தில் பாலம் கட்ட பயன்படுத்திய கல்லாக இருக்கும் என கூறுகிறார்கள். அதனால்  நான் அதை பத்திரமாக வைத்துள்ளேன் என கூறியுள்ளார். மேலும் இது குறித்து மற்றொரு நபர் கூறியதாவது. இந்த கல் பார்ப்பதற்கு ஆச்சரியத்தை தருகிறது. அதேபோல் கல் மிதக்கும் தண்ணீரில் மற்றொரு கல்லை போட்டால் அது மூழ்கி போகிறது. ஆனால் இந்த கல் மூழ்காமல் மிதப்பது ஆச்சரியத்தை தருகிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |