Categories
சினிமா தமிழ் சினிமா

அட உண்மைதாங்க….! நடிகையுடன் காதல் அறிவித்த பிரபல தமிழ் நடிகர்….!!!

நடிகை மஞ்சிமா மோகனுடனான தன்னுடைய காதலை கவுதம் கார்த்திக் அறிவித்துள்ளார். 2019ல் வெளியான தேவராட்டம் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போதிருந்து நெருக்கமாக பழகிவந்த இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் கௌதம் கார்த்திக் பிறந்த நாளுக்கு நடிகை மஞ்சிமா மோகன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை “my favorite human” என குறிப்பிட்டு காதல் குறியீட்டை பயன்படுத்த, அதற்கு கவுதமும் நன்றி “MY favorite human” என கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார்.

இருவரும் மாறி மாறி காதல் குறியீட்டை பயன்படுத்தி, காதலை உறுதி செய்தனர். இந்நிலையில் இருவரின் காதல் குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் “இருவரும் ஒன்றாக நம் பயணத்தை தொடரும் நேரத்துக்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |