Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள்…. புதர் மறைவில் நின்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கியதால் வனக்காப்பாளர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மசினகுடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உப்பள்ளா என்ற இடத்தில் புதர் மறைவில் நின்ற காட்டெருமை வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் தப்பி ஓடினர்.

ஆனால் காட்டெருமை வன காப்பாளரான சசிதரன் என்பவரை முட்டி தள்ளியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் வன ஊழியர்கள் சத்தம் போட்டு காட்டெருமையை விரட்டினர். இதனை அடுத்து சசிதரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |