Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மீண்டும் வந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

காட்டு யானையின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் மாவனல்லா பகுதிக்குள் காட்டி யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற பெண்ணையும், ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரையும் இந்த காட்டு யானை தாக்கி கொன்றது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனசரகர் ஜான் பீட்டர் கூறியதாவது, இரவு பகலாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் வேறு வழியாக ஊருக்குள் யானை நுழைந்து விடுகிறது. இந்நிலையில் கர்நாடகா வனப்பகுதிக்கு யானையை விரட்டும் பணி நடைபெற்றுள்ளது. ஆனால் யானை திரும்பி வந்ததால் தொடர்ந்து அதனை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |