Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு வந்த குறுஞ்செய்தி…. “18 லட்சத்தை இழந்த வாலிபர்”… போலீசார் விசாரணை….!!!!!!

செல்போன் எண்ணிற்கு வந்த குறுந்தகவலை நம்பி 18 லட்சத்தை இழந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் செல்போன் எண்ணிற்கு சென்ற ஆகஸ்ட் மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவு பணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் பார்த்திபன் அந்த குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்ட தகவலின்படி 18 லட்சம் முதலீடு செய்து இருக்கின்றார். ஆனால் பணம் செலுத்தியதற்கான ரசீதும் வரவில்லை, அந்த எண்ணயை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பார்த்திபன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |