Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன ஓட்டிகளே….!!!! ஜாக்கிரதையா இருங்க…. போக்குவரத்து போலீசாரின் அறிவுரை….!!!!

தமிழ்நாட்டில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அபராத கட்டணம் பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்த ப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் புதிய அபராத கட்டணம் இன்னும் ஓரிரு நாட்களில் அமல்படுத்த பட உள்ளது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வில் புதிதாக உயர்த்தப்பட்ட அபராத கட்டண விவரங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் பேசிய போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கூறியதாவது “புதிதாக அமல்படுத்தப்பட்ட சட்ட திருத்தத்தின்படி ஆவணங்கள் இல்லாமலோ, சீருடை அணியாமலோ, தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்து எதிர் திசையில் வந்தாலோ ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும். மேலும் சிக்னலை மதிக்காவிட்டால் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

அது மட்டுமல்லாமல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் ரூபாய் 5000 ஆயிரமும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். எனவே ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஆட்டோ சங்க நிர்வாகிகள் தங்கள் சங்கத்தில் உள்ளவர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்கி போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்றும்படி அறிவுறுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |