Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நூற்பாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்த பெண்கள்”…. அதிகாரிகள் மீட்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் தனியார் நூற்பாலையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 35 பெண்கள் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் கொத்தடிமைகளாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வருவதாகவும் வேலை தங்களுக்கு கடினமாக இருப்பதாகவும் தங்களை மீட்டு தங்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்திருக்கின்றார்கள்.

அதன் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், உதவி ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது நேற்று அதிகாலை 3 மணி வரை நடந்தது. இதன் பிறகு வெளி மாநிலத்தைச் சேர்ந்த 35 பெண்கள் 8 மணி நேர வேலைக்கு பதிலாக கூடுதல் நேர வேலையும் வார விடுமுறை தராமல் தினக்கூலியை குறைத்தும் கொத்தடிமைகளாக வேலை வாங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 35 பெண்களையும் மீட்டார்கள். பின் நிறுவனத்திடம் இருந்து கருணைத்தொகையாக தலா ரூபாய் பத்தாயிரம் வீதம் வாங்கி கொடுத்தார்கள். இதை அடுத்து 35 பெண்களையும் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

Categories

Tech |