Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆரம்பமான துணிவு டப்பிங் பணி”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது.

இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.  இந்த நிலையில் அதனை மஞ்சுவாரியார் உறுதிப்படுத்தி இருக்கின்றார். தனது இணையதள பக்கத்தில் துணிவு திரைப்படத்திற்கு டப்பிங் செய்யும் புகைப்படத்தை மஞ்சு வாரியர் பதிவு செய்திருக்கின்றார். இதனை அஜீத் ரசிகர்கள் பலரும் அதிகம் ஷேர் செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |