தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் குறிப்பாக, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.